முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் பெண்ணொருவர் படுகொலை..!

0
81

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருக்கு உட்பட்ட மூங்கிலாறு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 84 வயதுடைய கோபாலன் குண்டுமணி என்கின்ற பெண்மணியினுடைய சடலம் புது குடியிருப்பு போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மரணம் தொடர்பாக புதுகுடியிருப்பு போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டதுடன் குறித்த சடலத்தை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நேரடியாக பார்வை செய்த பின் உடற்கூட்டு பரிசோதனைகளுக்காக சடலம் போலீசாரால் எடுத்துச் செல்லப்பட்டு இருக்கின்றது.

கொலை செய்யப்பட்ட பெண் கஸ்தூரியர் வீதி யாழ்பாணம் என்ற முகவரியை சேர்ந்தவர் என்றும் பிள்ளையார் அப்பள கொம்பனி உரிமையாளர் என்றும் கூறப்படுகின்றது.

மேலதிக விசாரணையை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.