மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு நேர்ந்த சோகம்.!

0
110

மகுலுகஸ்வெவ பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஒருவர் தாக்கப்பட்டு கடத்தப்பட்டதாக மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு 119 என்ற அவசர தொலைபேசி எண்ணிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட நபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, ​​மற்றொரு நபர் வீதியை மறித்து நிறுத்தி அவரை தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேவஹுவ பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக 26 வயதான கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவருடன் நீண்டகாலமாக நிலவிய தகராறு அதிகரித்து சந்தேகநபர் இந்தக் கொலையைச் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மகுலுகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.