ரணில் நீதிமன்றில் ஆஜராக மாட்டார் என அறிவிப்பு.!

0
78

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ விஜயம் செய்ததாகக் கூறி தனிப்பட்ட விஜயத்தில் ஈடுபட்டதன் மூலம் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஓகஸ்ட் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இன்று வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி அங்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அவர் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படவிருந்த போதிலும், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்

இதற்கிடையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வீதித் தடைகளை உடைத்து நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய முயற்சிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

எவ்வாறாயினும், கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் கலகக் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தற்போது பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.