மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதிகள்; 11 பெண்கள் உட்பட 13 பேர் கைது.!

0
55
Common photos

பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போகுந்தர பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 11 பெண்கள் உட்பட 13 பேர் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை (25) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் மசாஜ் நிலையங்களின் உரிமையாளர்கள் இருவரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மசாஜ் நிலையங்களின் உரிமையாளர்கள் இருவரும் நுவரெலியா டிக்கோயா மற்றும் மாத்தறை தெனியாய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 30 மற்றும் 32 வயதுடையவர்கள் ஆவர்.

கைதுசெய்யப்பட்ட 11 பெண்களும் கண்டி குண்டசாலை, போகல்ஆர, மொரபிட்டிய, நேபட, தெனியாய, மஹியங்கனை, அநுராதபுரம், போகஹவெவ, ஜா-எல , புத்தளம், இராஜகிரிய மற்றும் கட்டியாவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 30 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட 13 சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்