கடலில் நீராட சென்ற 2 மாணவர்கள் மாயம்.!

0
307

பயாகல கடற்பகுதியில் நீராட சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பயாகல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காணாமல் போன 2 மாணவர்களும் கல்பான மற்றும் பாணந்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

குறித்த இருவரும் மேலதிக வகுப்புக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு, அந்த கடற்பகுதிக்கு நீராட சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.