தனியார் வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த தாயின் மரணம் தொடர்பாக இன்று மூன்று பேர் கொண்ட சிறப்பு தடயவியல் வைத்தியர்கள் குழு பிரேத பரிசோதனை நடத்த உள்ளது.
காலி நீதவான் இந்த பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.
காலியைச் சேர்ந்த, 46 வயதான செவ்வந்தி வயிற்று வலி காரணமாக ஹிம்புராலவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கருப்பைக்கட்டியை குணப்படுத்த அவரது கருப்பையை அகற்ற வேண்டும் என்று ஒரு மகளிர் வைத்திய நிபுணர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இரண்டாவது டோஸ் ஊசி போட்ட பிறகு அவரது உடல்நிலை மிகவும் மோசமாகியது, இதனால் அவர் கராப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
கராப்பிட்டியில் உள்ள வைத்தியர்கள் முயற்சித்த போதும், அவரது மூளைக்கு இரத்தம் செல்வது தடைப்பட்டதால் ஆகஸ்ட் 23ஆம் திகதி அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.C