குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உதித லியனகேவை செப்டம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் இன்று (25) முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட குற்றச்சாட்டில் குறித்த பொலிஸ் மா அதிபரின் மனைவி உட்பட 8 பேரை அநுராதபுரம் பொலிஸார் முன்னதாக கைது செய்திருந்தனர்.
இதனை அடுத்து தாம் பிரதி பொலிஸ்மா அதிபர் என்றும், தமது மனைவியை உடனடியாக விடுவிக்குமாறும் அநுராதபுரம் பொலிஸாருக்கு சந்தேநபர் தொலைபேசியில் அழுத்தம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், இன்றைய தினம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.