மின்னல் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

0
68

வயலில் மின்னல் தாக்கத்தினால் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் (வயது-53) உயிரிழந்துள்ளதாக கஹடகஸ்டிகிலிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரத்மலை, உப்புல்தெனியவில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான குணசேனகே உபாலி சமரவிக்ரம (53) என்பவரே உயிரிழந்துள்ளார்.

ரத்மலையில் உள்ள நெல் வயலில் மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருந்த தனது மாடுகளை வீட்டிற்கு கொண்டு வருவதற்காக கனமழை பெய்த போதிலும் வயலுக்குச் சென்றபோது அந்த நபர் மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மின்னல் தாக்கத்தினால் பலத்த தீக்காயங்களுக்கு ஆளான நபர் தம்மன்னாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.