மதவாச்சியில் உள்ள யகாவெவ ரயில் கேட் அருகே கொழும்பு கோட்டையில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்ட நிலையிலேயே அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் மதவாச்சியில் உள்ள யகாவெவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என்று கூறப்படுகிறது.
குறித்த நபர் ரயில்வே கேட்டில் தற்காலிக காவலராக பணியாற்றியிருந்த சந்தர்ப்பத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.