கிளிநொச்சியில் மனநலம் பாதிக்கப்பட்டவரின் கத்தி வெட்டுக்கு இலக்காகி தாயும், சகோதரனும் படுகாயம்.!

0
6

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவரின் வெட்டுக்கு இலக்காகி தாயும் சகோதரனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வாள் வெட்டுக்கு இலக்கான தாயும் சகோதரனும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,

மேலதிக சிகிச்சைக்காக தாயார் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்டவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன். நீதிமன்ற அனுமதியுடன் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.