வெப்பநிலை தொடர்பில் வௌியான அறிவிப்பு.!

0
41

பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை நாளை (24) கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இந்த நிலைமையை எதிர்பார்க்கலாம் என்று அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, குறித்த பகுதிகளில் வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.