பண்டாரகம பொலிஸ் பிரிவின் பொல்கொட பாலத்திற்கு அருகில் நேற்று (21) மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரில் பயணித்த 57 வயதுடைய பாணந்துறை, பின்வல பகுதியைச் சேர்ந்த அந்த நபர், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டில் T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், அவர் மீது 20-க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
சந்தேக நபர்களைக் கைது செய்ய பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.