திருகோணமலைப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறக்கக் கண்டி கடல் பகுதியில் இன்று (21) இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
குச்சவெளி இறக்ககக் கண்டி வாழை ஊத்து பகுதியை சேர்ந்த என்.அப்சான் வயது (22) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.