ஜனநாயகன் தான் கடைசி படம்; முற்றுப்புள்ளி வைத்த விஜய்.!

0
2

திரைப்படங்களில் இனிமேல் விஜய்யின் பஞ்ச் வசனத்தையும் மாஸ் கரிஷ்மா ஆக்டிங்கையும் பார்க்க முடியாமா என நினைத்த ரசிகர்களுக்கு அடிக்கடி மாநில மாநாடு வைத்தாலே பல படங்களுக்கும் ஆடியோ லாஞ்சுக்கும் இணையாக இருக்கும் என்பதை நிரூபித்துள்ளார்.

மதுரையில் இன்று நடைபெற்ற பிரம்மாண்டமான மாநாட்டில் கலந்துக் கொண்டு பேசிய விஜய் சிவகாசி சரவெடி போல வெடித்து பேசியது ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கியுள்ளது.

ஆனால், அதே சமயம் சினிமா ரசிகர்களுக்கு மீண்டும் புரியும்படி தான் இதற்கு மேல் படங்களில் நடிக்க மாட்டேன் என்பதை திட்டவட்டமாக சொல்லியிருப்பது சற்றே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் அடுத்த படத்துக்கு கதை கேட்டு விட்டார் என்றும் லியோ 2வில் நடிப்பார் என்றெல்லாம் வதந்திகள் பரவி வரும் நிலையில், இதற்கு மேல் தனக்கு எந்த வேலையும் இல்லை என்றும் மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்த மக்கள் பணியாற்ற மட்டுமே போவதாக கூறியுள்ளார்.

ஆடியோ வெளியிட்டு விழாக்களில் விஜய் எப்போதுமே குட்டி ஸ்டோரி சொல்வது வழக்கம். இன்று நடைபெற்ற மதுரை மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலினை அங்கிள் என கலாய்த்து பேசிய விஜய் குட்டிக் கதை ஒன்றையும் கூறி அரசியல்வாதி வேஷத்தில் பலர் திருடர்களாக உள்ளார்கள் என கடுமையாக பேசியிருந்தார்.