நாளை (22) வடக்கு, கிழக்கில் கடும் வெப்பம்.. மக்களுக்கு எச்சரிக்கை..!

0
50

நாட்டின் பல பகுதிகளில் நாளை (22) வெப்பநிலை அதிகரித்த மட்டத்தில் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்று (21) பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை நாளை வரை செல்லுபடியாகும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் வெப்பக் குறியீடானது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.