பேலியகொடையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு.!

0
84
Common Photo

பேலியகொடை ஞானரதன மாவத்தைப் பகுதியில் இன்று (19) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் பலியானார்.

காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்தார்.

பேலியகொடை ஞானரதன மாவத்தைப் பகுதியில் இன்று (19) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

அடையாளம் தெரியாத இருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, அவரை இலக்கு வைத்து குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது

இந்த துப்பாக்கிச் சூட்டில் வீதியில் பயணித்த ஒருவரும் காயமடைந்தார்.

இதனையடுத்து காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.