வயல் வெளியிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்ப்பு.!

0
27

பதுளை, கைலகொட முதியோர் இல்லத்திற்கு அருகிலுள்ள வயல்வெளியில் இருந்து இன்று (18) காலை மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு நாட்களுக்கு பின்னர் வயலின் உரிமையாளர் வயலுக்குச் சென்றுள்ள நிலையில், இதன்போது அந்த நபரின் சடலத்தை பார்த்து, பின்னர் பொலிஸுக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பதுளை பொலிஸ் அதிகாரிகள் சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சடலம் இருந்த இடத்திற்குச் செல்ல பொலிஸ் கடும் முயற்சி எடுக்க வேண்டியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர் சுமார் 65 வயது மதிக்கக்தக்க ஆண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பதுளை பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.