பேருந்து மோதியதில் கிராம உத்தியோகத்தர் உயிரிழப்பு..!

0
58

மாத்தளை – கைகாவல பகுதியில் தனியார் பேருந்து ஒன்று மோதியதில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தார்.

அவர் தொழிலுக்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது சம்பவ இடத்திலேயே கிராம உத்தியோகத்தர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் மாத்தளை, ரத்தோட்டை கைகாவல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய கிராம உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டதுடன் ரத்தோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.