மினுவாங்கொடை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் இருந்து T-56 துப்பாக்கி மற்றும் பல்வேறு ஆயுதங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் பேரில் இன்று (15) நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
விசாரணையில் சந்தேக நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரியும், 45 வயதுடைய மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இதன்படி, சந்தேக நபரிடமிருந்து T-56 ரக துப்பாக்கி, ஒரு கைத் துப்பாக்கி, T-56 தோட்டாக்கள், கைத் துப்பாக்கி தோட்டாக்கள், மூன்று வாள்கள் மற்றும் இரண்டு கத்திகளையும் மீட்டுள்ளனர்.