மொரட்டுவ-பிலியந்தல வீதியின் கொஸ்பெலன பாலத்திற்கு அருகிலுள்ள போல்கொட ஆற்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 46 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
போல்கொட ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் கடந்த இரண்டு நாட்களாக வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தார்.
அது தொடர்பில் அவரது குடும்ப உறுப்பினர்களால், பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
நீண்ட காலமாக, அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததுடன், வேறு பல நோய்களுக்கும் ஆளாகியிருந்ததாக உயிரிழந்தவரின் சகோதரர் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பிலியந்தல பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.