யாழில் சடலமாக மீட்க்கப்பட்ட பெண் தொடர்பில் வெளியான தகவல்.!

0
32

யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு கடல் நீரேரியிலிருந்து இன்று மாலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.

மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வந்த மீனவர்கள் கடலில் சடலம் ஒன்று மிதந்து இருப்பதைக் கண்டு அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த அச்சுவேலி பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேவேளை, இன்று மாலை அச்சுவேலி, தோப்பூரை சேர்ந்த பெற்றோர், அச்சுவேலி பொலிஸ் நிலையம் சென்று, தமது மகள் வீடு திரும்பவில்லையென முறையிட்டனர். செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்துக்கு சென்ற மகள் திரும்பவில்லையென்றனர்.

இராசசிங்கம் சுபாசினி (40) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார். அவர் சிறியளவு மனவளர்ச்சி குன்றியவர் என்றும் தெரிய வருகிறது.