யாழில் மலேரியா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு.!

0
8

மலேரியா தொற்றால் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

நெடுந்தீவைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் கடுமையான நோய் நிலையுடன் கடந்த ஆறு நாட்களாக யாழ். போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடுமையான தொற்று மற்றும் பல்வேறு அங்கங்களின் செயற்பாட்டு இழப்பால் நேற்று முன் (09) உயிரிழந்தார்.

மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில், அவர் Malaria Falciparum மலேரியா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததை யாழ். போதனா வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது.