வௌிநாட்டு பெண்ணொருவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு.!

0
88

அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் இன்று (11) நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இறந்தவர் 48 வயதான வியட்நாமை சேர்ந்த பெண் என தெரியவந்துள்ளது.

குறித்த பெண் மற்றொரு குழுவுடன் மொரகல்ல கடற்கரையில் நீராடிய போது அலையில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அவரது உடல் பெந்தர கடற்கரையில் கரையொதுங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.