யாழில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்..!

0
43

யாழ்ப்பாணம் – மண்கும்பான் கடற்கரை பகுதியில், இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கடற்பகுதியில் சடலம் ஒன்று கரையொதிங்கியுள்ளதாக, பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய, ஊர்காவல்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, ஊர்காவல்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.