புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகும் திகதி அறிவிப்பு.!

0
6

இன்று (10) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில் இன்று (10) நடைபெற்றதுடன், அதில் 307,951 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றினர்.

அதேநேரம் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இந்தாண்டு (2025) நவம்பர் மாதம்10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

அத்துடன் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சை 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.