குஷ் போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட சந்தேக நபர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இன்று (07) காலை விமான நிலைய வருகை முனையத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து 12 கிலோ 160 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைதான ஆண் சந்தேகநபர் 42 வயதுடையவர் எனவும் பெண்கள் இருவரும் 22 மற்றும் 43 வயதுடையவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.