அமெரிக்க பரஸ்பர தீர்வை வரி விவகாரத்தில் எவ்வித இறுதி ஒப்பந்தங்களும் இதுவரையில் கைச்சாத்திப்படவில்லை எனவும் இது தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்ற அமர்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
பொருளாதாரம் பாதிக்கப்படும் மீண்டும் நெருக்கடி ஏற்படும் என்ற கனவை மறந்து விடுங்கள்.
இடைக்கால ஜனாதிபதி என்பதொன்று ஏற்படாது. மாற்று வழியில் அரசியல் செய்யுங்கள் என்பதை எதிர்க்கட்சிகளுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
சர்வதேச நாணய நிதியத்தின் வரைபுக்கமைய பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகள் செயற்படுத்தப்படும்.
அத்துடன் அமெரிக்க பரஸ்பர தீர்வை வரி விவகாரத்தில் எவ்வித இறுதி ஒப்பந்தங்களும் இதுவரையில் கைச்சாத்திப்படவில்லை என்பதுடன் இது தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.இது குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு திறமையான குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.
இதன்போது நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, வர்த்தக அமைச்சின் செயலாளர் விமலேந்திர ராஜா, ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் துமந்த ஹுலங்கம மற்றும் சிறப்பு ஒருங்கிணைப்பு உதவிகளை வழங்கிய அமெரிக்க தூதர் ஆகியோரின் பங்கேற்பையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.
மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் உறுதியாக நீக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. அது குறித்து வேறு தரப்புகள் எமக்கு விளக்கமளிக்க வேண்டியதில்லை. அவ்வாறு விளக்கமளித்தால் அதனை ஏற்றுக்கொள்கிறோம்.
உறுதியாக பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும். அதேபோன்று ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்திலும் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.