நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 உயிர்மாய்ப்புச் சம்பவங்கள் பதிவாவதாக தேசிய மனநல நிறுவனத்தின் மனநல வைத்தியர் சஜீவன அமரசிங்க தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
1996 ஆம் ஆண்டில், உயிர்மாய்ப்புச் சம்பவங்களின் அடிப்படையில் உலகில் இரண்டாவது இடத்தில் இருந்தோம். ஒரு இலட்சத்திற்கு 47 பேர்.
அந்த காலகட்டத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவுடன் எடுக்கப்பட்ட முடிவுகளால் நாங்கள் மிகவும் வீழ்ச்சியடைந்தோம்.
இப்போது அது ஒரு லட்சத்திற்கு 15ஆக மாறியுள்ளது. வருடத்திற்கு 3,500 பேர். கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இது அதிகரிக்கவில்லை.
நாளொன்றுக்கு சுமார் 8 உயிர்மாய்ப்புச் சம்பவங்கள் நடக்கின்றன. பிரபலமான மரணங்கள் மட்டுமே ஊடகங்களுக்குச் செல்கின்றன. இன்னும் பல உயிர்மாய்ப்புச் சம்பவங்கள் உள்ளன.
உயிர்மாய்ப்புச் சம்பவங்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை என்றாலும், இந்த சர்ச்சைக்குரிய உயிர்மாய்ப்புச் சம்பவங்கள் இப்போதெல்லாம் நடந்து வருகின்றன.
ஆனால் ஊடகங்கள் கடந்த காலங்களைப் போல இதுபோன்ற விடயங்களைப் பெரிதாக காண்பிப்பதில்லை. அது ஒரு பெரிய முன்னேற்றம். – என்றார்.