சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,504 முப்படை வீரர்கள் கைது.!

0
52

2025 பெப்ரவரி 22 முதல் ஓகஸ்ட் 3 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,504 முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 2,937 இராணுவ வீரர்கள், 289 கடற்படை வீரர்கள், மற்றும் 278 விமானப்படை வீரர்கள் உள்ளடங்குவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

2024 ஏப்ரல் 20 முதல் மே 20 வரை அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில் சரணடையாத முப்படை வீரர்களைக் கைது செய்ய, பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரில் 2025 பெப்ரவரி 22 முதல் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கைது செய்யப்பட்ட வீரர்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், இவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.