நுவரெலியா பொலிஸாரால் நேற்று குடிபோதையில் வாகனம் செலுத்தியதற்காக கைது செய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியா நீதவான் லங்காகனி பிரபுத்திகா இந்த உத்தரவை பிறப்பித்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சாரதி திவுலபிட்டிய, மெதகம்பிட்டியவைச் சேர்ந்த 47 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சாரதி அதிக குடிபோதையில் ஏராளமான பயணிகளுடன் பேருந்தை செலுத்திச் சென்றுள்ளார்.
குறித்த பேருந்து நீர்கொழும்புக்கு செல்லவிருந்த நிலையில், நுவரெலியாவில் பொலிஸார் அதைச் சோதனையிட்டபோது, சாரதி குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
சாரதி இருக்கைக்குப் பின்னால் 750 மில்லி சட்டவிரோத மதுபான கேனையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.
அதன்படி, குறித்த சாரதி கைது செய்யப்பட்டு, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் சாரதிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
பேருந்தை ஓய்வு நிறுத்தத்தில் நிறுத்தி நீர் அருந்துவது போல, சாரதி மது அருந்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.