நேற்று (02) பொலன்னறுவை – ஹபரண வீதியின் 63வது மற்றும் 64வது மைல்கல்களுக்கு இடையில் மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த டிப்பர் லொறியுடன் மோதிய விபத்தில் உந்துருளியின் பின்னால் அமர்ந்து சென்றவர் லொறியில் சிக்கி படுகாயமடைந்தார்.
பின்னர் அவர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஜயந்திபுர பகுதியில் வசித்து வந்த 25 வயதான இளம் பெண் என தெரியவந்துள்ளது.