திருகோணமலை வடக்கு கடற்கரை வீதியில் குழுவொன்றினால் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 32 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருந்துபசாரத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்தக் கொலை நடந்ததாக முதற்கட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.