நெடுங்கேணியில் நடந்த சோகம்.. டிப்பர் சில்லுக்குள் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!

0
28

வீதி ஒழுங்கையில் நித்திரை கொண்ட நிலையில் மைத்துனரின் ரிப்பரினால் தவறுதலாக ஏற்றப்பட்டநிலையில் உடல் நசுங்கி பட்டிக்குடியிருப்பு இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பில் நடந்துள்ளது.

மேலும் தெரியவருகையில்..

தனது வீட்டு ஒழுங்கையில் நேற்றிரவு படுத்து உறங்கிய இளைஞனை கவனிக்காத ரிப்பர்ரக வாகனத்தைச் செலுத்தி வந்த இளைஞனின் மைத்துனர் வீடொன்றில் சல்லிக்கல்லினை பறித்துவிட்டு வாகனத்தை திருப்பியுள்ளார்.

இரவு நேரமாகையால் குறித்த ஒழுங்கையில் இளைஞன் படுத்திருந்ததை அறிந்திருக்காத நிலையில் வாகனம் ஒழுங்கையில் படுத்திருந்த இளைஞன் மீது ஏறியுள்ளது.

இன்று காலையிலே குறித்த இளைஞன் வாகனத்துள் நசுங்கி நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதை அறிந்து மைத்துனரான வாகனச்சாரதி நெடுங்கேணிப் பொலிசாரிடம் சரணடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.