பாணந்துறை, ஆதம் பொரஸ் பகுதியில் உள்ள பொல்கொட ஆற்றின் அருகே சுமார் 1 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 15,000 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும், 50,000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் பாணந்துறை பொது சேவை வீதியில் வசிக்கும் 30 வயதுடையவர் ஆவார்.
பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நபரை சோதனைக்கு உட்படுத்திய போதே போதைப்பொருள் இவ்வாறு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட உள்ளது.