தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு.!

0
214

அம்பலாந்தோட்டை, ஹூங்கம, பிங்கம பகுதியில் இன்று (2) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வயலில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அனுமதிப்பத்திரம் பெற்ற துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பின்னர் துப்பாக்கியுடன் ஹூங்கம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

தங்காலை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல செனவிரத்னவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, ஹூங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.