யாழில் தாங்க முடியாத நோய்த்தாக்கம் – வயோதிபப் பெண் கிணற்றுக்குள் பாய்ந்து தற்கொலை.!

0
11

யாழில் வியாதிகளின் தாக்கம் தாங்க முடியாமல் வயோதிபப் பொண்ணொருவர் நேற்றையதினம் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

நீர்வேலி வடக்கு நீர்வேலி பகுதியைச் சேர்ந்த அருந்தவரத்தினம் சத்தியஞானதேவி (70) என்பவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

இவருக்கு பல்வேறு விதமான வியாதிகள் காணப்படுகின்றன. இந்நிலையில் வியாதியின் தாக்கம் தாங்க முடியாமல் நேற்றையதினம் கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.