ஒரு மசாஜ் நிலையத்திற்குள் வாள் மற்றும் கத்தியுடன் மூன்று பேர் நுழைந்து, காசாளரின் கழுத்தில் கத்தியை வைத்து பணலாச்சியில் இருந்த ரூ. 60,000 மற்றும் இரண்டு மொபைல் போன்களை கொள்ளையடித்துச் சென்றதாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
களனி டயர் சந்தி பகுதியில் உள்ள மசாஜ் நிலையத்திலேயே இவ்வாறு கொள்ளையடித்துள்ளனர்.
மசாஜ் நிலையத்தின் சிகிச்சையாளர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மசாஜ் நிலையத்தில் சேவைகளைப் பெறுவதற்கான காரணத்தை போலியாக கூறி மூன்று சந்தேக நபர்களும் உள்நுழைந்து கொள்ளையடித்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.