மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆரையம்பதி, தீர்த்தகரை வீதியில் உள்ள வீடு ஒன்றில், பணப் பரிவர்த்தனை தொடர்பாக ஏற்பட்ட வாய்தர்க்கத்தை அடுத்து நடந்த வாள்வெட்டு சம்பவத்தில், பெண் ஒருவரும் அவரது ஒரு வயது குழந்தையும் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (27) இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு 9:00 மணியளவில், பெண்ணின் உறவினரான ஆண் ஒருவர், பணம் கேட்டு ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, பெண்ணையும் குழந்தையையும் வாளால் தாக்கியதில் இருவரும் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தாக்குதல் நடத்தியவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.