’அஸ்வெசும’ கால அவகாசம் இன்றுடன் நிறைவு..!

0
242

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்திற்காக மேன்முறையீடு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்று திங்கட்கிழமை (21) நிறைவடையுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

தற்போது இரண்டாம் கட்டத்தின் கீழ் அஸ்வெசும பயனாளர்களிடமிருந்து சுமார் 30,000 மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, இன்று திங்கட்கிழமை (21) முதல் குறித்த மேன்முறையீடுகள் பிரதேச செயலகங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு குழுவினூடாக மீளாய்வு செய்யப்படும்.

மீளாய்வின் பின்னர் நாட்டிலுள்ள அனைத்து பிரதேச செயலக செயலணியினூடாக குறித்த மேன்முறையீடுகள் நலன்புரி நன்மைகள் சபைக்கு அனுப்பப்படும்.

இதன்பின்னர் பயனாளர்களை தெரிவு செய்து நலன்புரி கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

பெயர்ப் பட்டியலை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிலிக் செய்யவும்.

https://iwms.wbb.gov.lk/household/list