தோல்வியில் முடிந்த துப்பாக்கிச் சூடு.. துப்பாக்கிதாரி தப்பியோட்டம்.!

0
129

கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள இரவு விடுதியில் நேற்று (19) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் திட்டமிட்டிருந்த துப்பாக்கிச் சூட்டு நடவடிக்கை தோல்வியடைந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்த வந்த இருவரின் இலக்கானது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் சகோதரரான பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ருவன் என்பவர் ஆகும்.

இருப்பினும், தெமட்டகொட ருவன் அடிக்கடி சென்று வரும் இந்த களியாட்ட விடுதிக்கு அவர் நேற்று (19) சற்று தாமதமாக வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தெமட்டகொட ருவன் வந்திருக்கிறாரா என்று பார்க்க துப்பாக்கிச் சூடு நடத்த வந்தவர் விடுதிக்குள் நுழைய முயன்றுள்ளார். இதன்போது பாதுகாப்பு அதிகாரிக்கும் துப்பாக்கிச் சூடு நடத்த வந்தவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபர் துப்பாக்கியை சம்பவ இடத்திலேயே விட்டுவிட்டு, மோட்டார் சைக்கிளையும் சம்பவ இடத்திலேயே விட்டுவிட்டு, சைக்கிள் ஓட்டுநருடன் தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த T56 ரக துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிள் இன்று பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல தலைமையிலான குழு முன்னெடுத்து வருகிறது. (Video-Derana)