அரநாயக்க பிரதான வீதியில் பயணித்து, கவிலிபிட்டிய, வசந்தகம சந்திக்கு அருகில் நேற்று (17) மாலை 4.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று அதிக வேகத்தில் சென்றபோது, அதனை ஓட்டியவர் கட்டுப்பாட்டை இழந்து, மின்கம்பத்தில் மோதி வடிகானில் விழுந்த விபத்தில், 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.