பல்பொருள் அங்காடியில் நடந்த தீ விபத்தில் 58 பேர் உயிரிழப்பு.! வீடியோ

0
174

ஈராக்கில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 58 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மேலும், இதன் ஆரம்ப விசாரணை முடிவுகள் 48 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கின் அல்-குட் நகரில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இன்று (17) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், சுமார் 58 பேர் உயிரிழந்துள்ளதாக வாசித் மாகாண ஆளுநர் முகமது அல்-மியாஹி தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளது.

ஒரு கட்டிடத்தின் பெரும்பகுதி தீப்பிடித்து எரிவதையும், புகை மூட்டங்கள் வெளியேறுவதையும் காட்டும் வீடியோ காட்சிகள் இணையத்தளங்களில் வௌியாகியுள்ளன.