அறுகம்குடாவில் மேலாடையின்றி சுற்றித் திரிந்த பெண் கைது.. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.!

0
164

அம்பாறை – அறுகம்குடா சுற்றுலாப் பகுதியில் மேலாடையின்றி நடந்து சென்ற வெளிநாட்டு பெண் ஒருவரை பொத்துவில் மகளிர் பொலிஸார் கைது செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரபலமான சுற்றுலாப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலின் நுழைவாயிலுக்கு அருகில் மேலாடையின்றி நடந்து செல்வதைக் காட்டும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.

இன்று (15) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அநாகரீகமான நடத்தைக்காக இரண்டு வார சிறைத்தண்டனையும், பொது மக்களுக்கு இடையூறு விளைவித்ததற்காக ஒரு மாத சிறைத்தண்டனையும் நீதிமன்றம் விதித்தது, இரண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

அவரது துணைவருடனான தனிப்பட்ட தகராறு இந்த சம்பவத்திற்கு வழிவகுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.