கிரைண்டரின் பிளேட் குத்தியதில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு.!

0
166

கிரைண்டரின் பிளேட் உடைந்து மார்பில் குத்தப்பட்டு, பாடசாலை மாணவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வெள்ளிக்கிழமை (11) அன்று உயிரிழந்துள்ளதாக கடான பொலிஸார் தெரிவித்தனர்.

கடான பிரதேசத்தைச் சேர்ந்த டி.எஸ். சஞ்சீவ அலஹகோன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவனின் பெரியப்பா கிரைண்டர் மூலம் சேவைகளை வழங்கும் தொழிலை நடத்தி வருவதுடன் அவர் இல்லாத போது, மாணவன் கிரைண்டர் மூலம் பி.வி.சி பைப்பை வெட்டிக் கொண்டிருந்ததாகவும் இதன் போது கிரைண்டரின் பிளேட்டின் ஒரு பகுதி உடைந்து மாணவனின் மார்பில் ஊடுருவி உள்ளே சென்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலத்தின் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடான பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.