க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A எடுத்த மகள்.. தந்தை விபத்தில் சிக்கி உயிரிழப்பு.!

0
129

பிள்ளைகளுக்கு உணவு வாங்கி சென்றவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை காப்பாளரான, நயினாதீவை சேர்ந்த பாலேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலி, பலாலி வீதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தில் உணவருந்திய பின்னர் பிள்ளைகளுக்கும் உணவு வாங்கிக்கொண்டு பலாலி வீதியில் துவிச்சக்கர வண்டியில் ஏற முற்பட்டவேளை , வீதியில் மிக வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் மோதியுள்ளது. அதில் படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை இவரது இரு பிள்ளைகள் பேராதனை மற்றும் ஶ்ரீஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் நிலையில், இளைய மகள் அண்மையில் வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.