15 வயது சிறுமி து.ஷ்.பி.ர.யோ.க.ம் – மைத்துனர் கைது.!

0
87

பத்தாம் வகுப்பில் படிக்கும் பதினைந்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக பொலிஸ் அவசர நடவடிக்கை பிரிவுக்கு புதன்கிழமை (09) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம், புத்தள பொலிஸ் பிரிவின் உனவட்டுன பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அந்தச் சிறுமி குடும்பத்தில் மூன்றாவது பிள்ளை, அவளுக்கு இரண்டு மூத்த சகோதரிகள் மற்றும் ஒரு தம்பி உள்ளனர்.

அவருடைய தாயும் தந்தையும் கூலித் தொழிலாளிகளாக வேலை செய்கிறார்கள். ஜூன் 4 ஆம் திகதி தாமரை பூ பறிக்க வீட்டிற்கு வருமாறு அச்சிறுமியின் சகோதரி அழைத்துள்ளார்.

அதன்படி, அவள் புத்தள உனவடுனவில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு வந்திருந்தாள். அந்த நாளில், சகோதரியின் கணவரும் புத்தள நகர சந்தைக்குச் சென்றனர்.

சிறிது தூரம் சென்ற போது, பணத்தை மறந்து வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துள்ளதாக தன்னுடைய மனைவியிடம் தெரிவித்துவிட்டு அவளுடைய கணவர் (மைத்துனர்) வீட்டுக்குத் திரும்பி வந்துள்ளார்.

வீட்டின் ஓர் அறையில் சிறுமி தூங்கிக் கொண்டிருந்தாள். அறைக்குள் நுழைந்த மைத்துனர் அவளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சந்தேக நபரைக் கைது செய்ய புத்தள பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.