யாழில் நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்தியவர் திடீரென உயிரிழப்பு.!

0
120

யாழ்ப்பாணம் – முலவைச் சந்தி அருகில் உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் புதன்கிழமை (09) அன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

அழகரத்தினம் கிறிஸ்டி பால்ராஜ் என்ற 48 வயதானவரே இவ்வாறு உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர் உள்ளிட்ட சிலர் செவ்வாய்கிழமை (08) அன்று இரவு குழுவாக இருந்து மதுபானம் அருந்தியதாக முதற் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தற்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.