வெலிமடை உமா ஓயாவில் நீராட சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் நடந்த இந்த சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு சிறுவர்களும் 10 வயதுடையவர்கள் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, நேற்று முன் தினம் (6) மட்டக்களப்பு- வாகரை, பனிச்சங்கேணி வாவியில் நீராடச்சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.