ஓமந்தை பகுதியில் ரயிலில் மோதி தாயும் மகளும் படுகாயம்.!

0
125
Common picture

வவுனியா ஓமந்தை பறண்நட்டகல் பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் தாய், மகள் என இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் (2) இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

ஏ9 வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் பறண்நட்டகல் வீதியில் பிரவேசிக்க முற்பட்டபோது, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய், மகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

விபத்து இடம்பெற்ற காரணத்தினால் ரயில் அங்கிருந்து அரை மணிநேரம் தாமதமாகவே கொழும்பு நோக்கிப் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.