யாழில் கசிப்பு அருந்தி விட்டு அதிக மது போதையில் படுத்திருந்தவர் அருகில் இருந்த கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மானிப்பாய் தெற்கு, மானிப்பாயைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின தந்தையான கணேசராசா சுவாகரன் (வயது-42) என்பவராவார்.
கடந்த 29 ஆம் திகதி இரவு 9.00 மணியளவில் அப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிக்கு சென்று சகிப்பு அருந்திவிட்டு சென்றுள்ளார். மீண்டும் நள்ளிரவு 11.00 மணிக்கு அங்கு சென்றபோது வீடு பூட்டி இருந்தால் காரணமாக அவர் அவ்விடத்திலேயே படுத்திருந்துள்ளார்.
போதையில் உருண்டு சென்ற அவர் அருகில் இருந்த கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
கடந்த, திங்கள் கிழமை இரவு சம்பவ இடத்துக்கு சென்ற யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.